Tuesday, April 13, 2010

அனைவருக்கும் உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

கனவுகள் பூத்த எணணங்களை கால தூரிகையோடு வண்ணங்கள் பூசிவிட‌ பருவத்தளிர் மங்கையைப்போலே புதிதாய் பூத்து நிற்கிறது புது வருடம்...!

விரோதி வருடம் முடிந்து , தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி சித்திரை மாதம் ஒன்றாம் தேதி புதன் கிழமை காலை 5.15 மணிக்கு மீன லக்னமும் ,மீன ராசியும் கஜகேசரி யோகமும் கூடிய சுபவேளையில் சுக்கிர ஓரையில் பிறக்கிறது விக்ருதி வருடம்.
மலரவிருக்கும் விக்ருதி புத்தாண்டில், அனைத்து நண்பர்களின் இல்லங்களிலும் நன்மையொன்றே நிகழ்ந்திட, இன்பமொன்றே சிறந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பணிவுடன் வேண்டுவோம்!

(தமிழ் புத்தாண்டு - சித்திரை முதல் நாள்)